Pages

Sunday 31 March 2013

அலுவலகப் பேருந்து பயணம்

அந்த அழகிய காலத்தில் அலுவலகப் பேருந்தில் செய்யும் ரகளைகளை நினைக்கும் போது 9 மணி நேர வேலை களைப்பும் மறந்து விடும் , ஆனால்
இன்றோ அவை அனைத்தும் தலைகீழாக  மாறி விட்டன ..

இம்மாற்றம்  மாறுவது  எப்போதோ..!!!!!!!




















Monday 28 January 2013

இருப்பிடம்

இருபது வருடங்கள் பழகிய இடமும் வாழ்கையும்
ஆறு மாதங்கள் பழகிய நட்பின் முன் ஈடாகவில்லை
புதிய அனுபவங்களில் புத்துயிர் பெற்ற நேரத்தில் , இடமாற்றம்

இரண்டு மாதங்கள் ஆகியும் இனிக்கவில்லை, இப்புதிய இருப்பிடம்!!!
என்ன அருமையான வாழ்கை !!!

Wednesday 16 January 2013

காலங்கள்

சென்னையில் கதிரவனை வெறுக்கும்  மக்கள்
ஏனோ பெங்களுரு வந்த  பிறகு கதிரவனை நேசிக்க ஆரமித்து விடுகின்றனர்.

கதிரவனை நேசிக்கவும் இடம் பொருள் வந்துவிட்டதோ?!!!!


Thursday 22 November 2012

பிறந்தநாள் வாழ்த்து

ஓராயிரம் தேவர்கள் ஈராயிரம் மலர்களை தூவி 
பிறந்தநாள் வாழ்த்து சொன்னாலும்
என் மனம் நிறையவில்லை,

ஏனென்றால் 
என் நண்பனின் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் நான்!!!

Wednesday 21 November 2012

கதிரவனின் காதல்

கதிரவன்  தினமும் தன் தூக்கத்தை தியாகம் செய்வதும்  
மேகங்களை கிழித்து கொண்டு ஆவலுடன் வருவதும்  ,

உலகிற்கு ஒளி  அளிக்க அல்ல 
பெண்ணே உன் அழகை ரசிக்க !!!

ஆனால் கருமேகமோ கண் சிமிட்டி கொண்டிருக்கும் 
கதிரவனின் கண்ணை மறைத்த சந்தோஷத்தில்  
தன்  ஆனந்த கண்ணீரை மழையாக பொழிகிறான்;) 
  

Tuesday 20 November 2012

விடியல்

விடியலின் கீதம் பறவைகளுக்குரியது 

அந்த கீதங்கள் முற்று பெறும் வேலையிலே 


கிழித்து வரும் செங்கிரணங்கள்,


மலர்ந்து வரும் பூக்கள் 


இன்றைய நாள் இனிய நாள் என்று 


நம்பிக்கை தரும் தோரணையில் !!!